» சினிமா » செய்திகள்
'தலைவர் 170' படத்தின் மும்பை படப்பிடிப்பு நிறைவு!
திங்கள் 30, அக்டோபர் 2023 11:04:53 AM (IST)

'தலைவர் 170' படத்தின் ரஜினி மற்றும் அமிதாப்பின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினி மற்றும் அமிதாப்பின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
