» சினிமா » செய்திகள்
சினிமாவிலிருந்து விலகுகிறேன்.. பதிவை நீக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!
திங்கள் 30, அக்டோபர் 2023 4:45:14 PM (IST)

இயக்குநர் அல்ஃபோன்ஸ் தான் சினிமாவிலிருந்து விலகுகிறேன் என பதிவிட்டு பின் அந்தப் பதிவை தனது சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை நேற்று தான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் குறைந்தபட்சம் ஓடிடி அளவிலான குறும்படங்கள், பாடல்கள், வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்.
நான் சினிமாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழியுமில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாகவோ அல்லது கணிக்க முடியாததாகவோ இருக்கும்போது, வாழ்க்கை 'இன்டர்வல் பஞ்ச்' போல திருப்பத்தைக் கொடுத்துவிடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த பதிவு பேசுபொருளானதும் அதை டெலீட் செய்துள்ளார். இருப்பினும் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து அவரது ரசிகர்கள் விரைவில் அல்போன்ஸ் குணமாக வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
.முன்னதாக அல்போன்ஸ் புத்திரன் ‘கோல்டு’ படத்துக்குப் பிறகு இளையராஜா இசையமைக்கும் ‘கிஃப்ட்’ படத்தை இயக்கி வருவதாக அறிவித்திருந்தார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அந்தப்படம் குறித்த வேறு அப்டேட் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
