» சினிமா » செய்திகள்

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறேனா? லாரன்ஸ் பதில்

ஞாயிறு 5, நவம்பர் 2023 10:38:15 AM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவில்லை என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதற்கு பதில் அளித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, "ரஜினிகாந்துக்கு நான் வில்லனாக நடிக்கபோவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. இதற்காக யாரும் என்னை அணுகி பேசவும் இல்லை. ஆனாலும் ரஜினிகாந்த் படத்தில் எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன். லோகேஷ் கதை, திரைக்கதையில் ரத்னகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்

மேலும் லாரன்ஸ் கூறும்போது, "காஞ்சனா பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுவரை ‘காஞ்சனா' படங்களின் மூன்று பாகங்கள் வந்துள்ளன. ‘காஞ்சனா-4' படத்துக்கான திரைக்கதை எழுதி வருகிறேன். எனக்குள்ள பேய் படங்கள் இமேஜை மாற்ற வித்தியாசமான கதையில் நடிக்க விரும்பினேன். அப்போதுதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் தாதாவான எனக்கும், சினிமா இயக்குனரான எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடக்கும் சம்பவங்களே கதை. கிளைமாக்ஸ் உருக்கமாக இருக்கும். ஜிகர்தண்டா 3-ம் பாகம் வரவும் வாய்ப்பு உள்ளது'' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory