» சினிமா » செய்திகள்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத் தலைப்பு அறிவிப்பு!
திங்கள் 6, நவம்பர் 2023 5:40:50 PM (IST)

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு ‘தக் லைஃப்’ (Thug Life) என பெயரிடப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நாளை (நவம்பர் 7) வெளியாகிறது. இதனிடையே, கமல்ஹாசன் - மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘KH234’ படத்தின் ப்ரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில் படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தக் லைஃப்’ (Thug Life) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ''என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரன்” என தனக்கே உரிய ஸ்டைலில் கமல் இன்ட்ரோ கொடுத்துள்ளார். வீடியோவில் கமலின் ஆக்ஷன் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘நாயகன்’ படத்தில் கமல் கேரக்டரின் பெயர் சக்திவேல் நாயக்கர். தற்போது இணைந்துள்ள படத்திலும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இப்படத்தில் நடிப்பவர்கள் விவரங்களை ராஜ்கமல் நிறுவனம் ஒவ்வொன்றாக அறிவித்துவந்தது. அதன்படி, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
