» சினிமா » செய்திகள்
சூப்பர் ஸ்டார் சர்ச்சை... ட்வீட்டுக்கு விஷ்ணு விஷால் விளக்கம்!
வியாழன் 16, நவம்பர் 2023 12:47:53 PM (IST)

கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தில் தான் எடிட் செய்த கேப்ஷன் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அன்று தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை விஷ்ணு விஷால் பகிர்ந்திருந்தார். அதில் ’ஃபேவரிட் படங்களுக்கு எல்லாம் ஃபேவரிட்’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ‘Superstars are superstars for a reason’ என்றும் கூறியிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த புகைப்படத்தில் ஏற்கெனவே இருந்த கேப்ஷனை ’stars are stars for a reason’ என்று மாற்றினார்.
இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. முதலில் சூப்பர்ஸ்டார்ஸ் என்று குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஏன் மாற்றவேண்டும்? என்று பலரும் விஷ்ணு விஷாலை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "சூப்பர்ஸ்டார்கள் சூப்பர்ஸ்டார்கள் தான். அந்தப் பதிவை நான் எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் அல்ல.
சூப்பர்ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன். எனவே என்னுடைய டைம்லைனில் நெகட்டிவிட்டியை பரப்புவோர் இங்கிருந்து கிளம்புங்கள். நமக்கென்று ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு அப்பாற்பட்டு, சாதித்த அனைவருமே சூப்பர்ஸ்டார்கள்தான். அனைவரையும் நேசியுங்கள். அன்பைப் பரப்புங்கள். வெறுப்பை அல்ல. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி முடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ என்ற கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
