» சினிமா » செய்திகள்
திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்: நடிகை ஷீலா அறிவிப்பு!
சனி 2, டிசம்பர் 2023 12:19:50 PM (IST)
"திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்" என்று நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் 2016இல் வெளியான ஆறாவது சினம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் 2017இல் ‘டுலெட்’ படம்தான் ஷீலா ராஜ்குமாரின் முழுமையான முதல் படம். இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்படது. பின்னர் மண்டேலா, திரௌபதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2 படங்களிலும் நடித்துள்ளார். மண்டேலா மிகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.
பெரிதும் வரவேற்பு பெற்ற மலையாளப் படமான கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ள ஷீலா ராஜ்குமார் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும் சோழன் வாலறிவன்” எனப் பதிவிட்டுள்ளார்.