» சினிமா » செய்திகள்
அண்ணன் விஜயகாந்த் நலம் பெற வேண்டும் : நடிகர் சூர்யா பிரார்த்தனை!
சனி 2, டிசம்பர் 2023 8:32:10 PM (IST)
அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு தொண்டர்களை சந்திக்காமல் வீட்டோடு இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இதனையடுத்து அவர் விரைவில் உடல்நிலை சரியாகி வீடு திரும்பி வேண்டும் என ரசிகர்களும், அவரது தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தமது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும் என பதிவிட்டுள்ளார். விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த "பெரியண்ணா" என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

ஜன நாயகனுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:34:07 PM (IST)

அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:57:00 AM (IST)

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!
சனி 20, டிசம்பர் 2025 11:29:16 AM (IST)

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

