» சினிமா » செய்திகள்

மும்முட்டி - ஜோதிகா படத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு!

திங்கள் 4, டிசம்பர் 2023 11:57:43 AM (IST)மும்முட்டி - ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்' என்கிற படத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த நவ.23 ஆம் தேதி வெளியானது.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் இதுவரை ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், கேரள கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "காதல் தி கோர் திரைப்படம் கிறிஸ்துவ உணர்வுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களைக் காட்சிப்படுத்த கத்தோலிக்க கிறிஸ்துவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.” எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்தக் கதைக்கு ஏன் கிறிஸ்துவ பின்னணியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீர நாடுகளில் இப்படத்திற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory