» சினிமா » செய்திகள்
மழைநீர் வடிகால் திட்டம் சிங்கப்பூருக்காகவா? சென்னைக்காகவா? நடிகர் விஷால் ஆவேஷம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:25:08 AM (IST)
மழைநீர் வடிகால் சேமிப்பு திட்டத்தை எங்கு தொடங்கினார்கள் எங்கு முடித்தார்கள் எனத் தெரியவில்லை என்று நடிகர் விஷால் விமர்சித்துள்ளார்.
மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச.3) மாலை முதல் திங்கள்கிழமை (டிச.4) இரவு வரை சென்னையில் பலத்த மழை பெய்தது. இந்த இடைவிடாத மிக கன மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். அதேவேளையில், மின்சாரம் பாய்ந்தும், கட்டடம், மரம் விழுந்தும் பொதுமக்கள் உயிரிழந்தனா். பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.
இது குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு விடியோவினை பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் விஷால், "நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது வீட்டிற்குள்ளேயே ஒருஅடி தண்ணீர் வருகிறது. அப்போது மற்ற இடங்களில் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். 2015இல் இப்படி நடந்தது. எப்படியோ சமாளித்துவிட்டோம். ஆனால் 8 வருஷம் கழித்து அதைவிடவும் மோசமாக இருக்கும்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
மழைநீர் வடிகால் சேமிப்புக்கு என்று ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதை எங்கு தொடங்கினார்கள் எங்கு முடித்தார்கள் எனத் தெரியவில்லை. வாக்களிக்கும் ஒரு வாக்காளனாக ஒரு விண்ணப்பத்தினை முன் வைக்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து மக்களுக்கு உதவ வேண்டும். இது அரசியல் குறித்த விமர்சனம் கிடையாது.
தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமாக கேவலாமானதாக இருக்கிறது. எதற்காக வரி கட்டுகிறோம் எனக் கேள்வி கேட்க வைக்காதீர்கள். தேர்தலுக்குப் பிறகு இந்த மாதிரி நேரத்தில் உங்களின் முகம் தெரிந்தால் நல்லது” எனப் பேசியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பதிவில், "மழைநீர் வடிகால் திட்டம் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா? ” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனாதிபதி விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்: தென் கொரிய அதிபருடன் சந்திப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:49:10 PM (IST)

ஜெயிலர்-2 படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:26:37 PM (IST)

வடசென்னை 2 விரைவில் தொடங்கும்: தனுஷ், வெற்றிமாறன் தகவல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:25:24 PM (IST)

வால்மீகி ராமாயணா திரைப்படத்திற்கு இளையராஜா இசை: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:45:45 PM (IST)

விஜய்தான் அடுத்த முதல்வர்: நட்டி நட்ராஜ் ஆதரவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:43:32 PM (IST)

ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)

