» சினிமா » செய்திகள்

வீடுபுகுந்து பெண்ணை மிரட்டியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார்

திங்கள் 1, ஏப்ரல் 2024 12:48:57 PM (IST)

வீடுபுகுந்து பெண்ணை மிரட்டியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறந்தபோது அது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் இருத்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவியை வீடுபுகுந்து மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீதேவி சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை சரண்யா மீது புகார் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சரண்யா பொன்வண்ணன் தரப்பிலும் ஸ்ரீதேவி மீது புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory