» சினிமா » செய்திகள்
கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா படப்பிடிப்பு நிறைவு!
திங்கள் 7, அக்டோபர் 2024 12:55:04 PM (IST)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் "சூர்யா - 44" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த சூழலில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

உணர்வுப் பூர்வமான திரைப்படம் பைசன் : படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)

பைசன் படம் சூப்பர்... மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினி!
புதன் 22, அக்டோபர் 2025 12:49:56 PM (IST)

இந்தி நகைச்சுவை நடிகர் அஸ்ரானி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
புதன் 22, அக்டோபர் 2025 11:38:44 AM (IST)

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

