» சினிமா » செய்திகள்

அஜித்குமார் பெயரில் போலி இணையதளம்: மேனேஜர் எச்சரிக்கை

செவ்வாய் 5, நவம்பர் 2024 8:16:01 PM (IST)

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அஜித்குமார் சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் பந்தயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியையும் தொடங்கி இருக்கிறார்.

24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24 ஹெச், போர்சே 992 ஜிடி3 ஆகிய கார் பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணியினர் போட்டியிட உள்ளனர். இதில் போர்சே 992 ஜிடி 3 கார் பந்தயத்துக்கான சோதனை ஓட்டத்தில் அஜித்குமார் பங்கேற்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியானது. அஜித்குமார் கார் ரேஸிங் அணியின் லோகோவும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அஜித்குமார் கார் ரேஸிங் என்ற பெயரில் போலி இணையதளம் உருவாகி உள்ளது. இந்த இணையதளத்தை உண்மை என்று நம்பி பலரும் பின் தொடர்கின்றனர். இதையடுத்து அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் செயல்படும் இணையதளம் அதிகாரப்பூர்வமானது அல்ல. இதனை புறக்கணிக்கவும். அதிகாரப்பூர்வ இணையதளம் விரைவில் அறிவிக்கப்படும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory