» சினிமா » செய்திகள்

இளையராஜா - ரஜினியின் சண்டையை ரசித்தேன் : பாடகி சிந்தியா

புதன் 4, டிசம்பர் 2024 3:51:44 PM (IST)



ரஜினிகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன் என ஏராளமான இயக்குனர்கள் உதவி இருந்தாலும் அவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய மற்றொரு பிரபலமும் இருக்கிறார். அவர் தான் இளையராஜா. ஏனெனில் ரஜினி நடித்த ஏராளமான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ரஜினி படத்தில் இடம்பெற்ற பல எவர்கிரீன் ஹிட் பாடல்கள் எல்லாம் ராஜாவின் இசையில் தான் வந்தது.

இருப்பினும் ஒரு மேடையில் இளையராஜாவிடம் அவர் தன்னைவிட கமல் படங்களுக்கு தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்திருப்பதாக வெளிப்படையாகவே கூறியதோடு, தன்னுடன் அவர் பணியாற்றிய கடைசி படமான வீரா படத்தின் பாடல்களை எல்லாம் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்றும் ஓப்பனாக கூறி இருந்தார். இப்படி சந்திக்கும் போதெல்லாம் செல்லமாக சண்டையிட்டுக் கொள்வதை இருவரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தற்போது ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை என்றாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ரஜினிகாந்த் அடிக்கடி போவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி அவர்கள் இருவரும் நேற்று சந்தித்துக் கொண்ட போது வெளிநாட்டுப் பெண் தயாரிப்பாளரான சிந்தியா லூர்து அவர்களை சந்தித்ததைப் பற்றி அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"இன்று ராஜா சாரின் அலுவலகத்தில் சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன். என்னுடன் ஒரே புகைப்படத்தில் இரண்டு ஜாம்பவான்கள். இதைவிட வேறு என்ன கேட்கப் போகிறேன். குறிப்பாக அவர்களுக்கு இடையே நடந்த அழகான சண்டையை ரசித்தேன். ரஜினி சாருக்கு மரியாதை தரும் விதமாக அவரை நடுவில் நிற்க வேண்டுமென ராஜா சார் கேட்டுக் கொண்டார். 

ஆனால், ராஜா சாருக்கு மரியாதை தரும் விதமாக என்னை நடுவில் நிற்க வேண்டுமென ரஜினி சார் கேட்டுக் கொண்டார். நாங்கள் மூவரும் அவரவர் எங்கு நிற்க வேண்டுமென முடிவெடுக்கும் வரை அந்த சண்டை சில வினாடிகளுக்கு நீடித்தது. சூப்பர் ஸ்டாரின் ஆசீர்வாதமும் கிடைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளர், பாடகி, நடிகையான சிந்தியா லூர்து தயாரித்து நடிக்கும் 'தினசரி' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory