» சினிமா » செய்திகள்
ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்!
வியாழன் 26, டிசம்பர் 2024 12:22:25 PM (IST)

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 7.5 - 6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றாா். இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளா் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்திருக்கிறாா். மேலும், இந்தப் போட்டியில் வாகை சூடிய 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளாா்.
குகேஷுக்கு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசில் தலைவா்களும், பல்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், குகேஷை தனது வீட்டுக்கு அழைத்து நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். மேலும், குகேஷுக்கு பொன்னாடை போர்த்தி பரிசாக புத்தகம் வழங்கியுள்ளார். அதேபோல், சிவகார்த்திகேயனும் குகேஷை தனது வீட்டுக்கு அழைத்து வாழ்த்தியுள்ளார். குகேஷுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன், பரிசாக கைக்கடிகாரத்தை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)
