» சினிமா » செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ ஜன.12-ல் ரிலீஸ்!

வெள்ளி 3, ஜனவரி 2025 4:19:07 PM (IST)



சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், பிரகாஷ் ராஜ், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மதகஜராஜா’. முழுக்க காமெடி பின்னணியில் கமர்ஷியல் படமாக இது அமைந்துள்ளது. ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. 

தயாரிப்பு நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியதால், ‘மதகஜராஜா’ வெளியாகாமல் இருந்தது. பலமுறை வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும் வெளியாகவில்லை. தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் பொங்கல் வெளியீடு என்று ‘மதகஜராஜா’ விளம்பரப் படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் புதிய ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory