» சினிமா » செய்திகள்
துபாய் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 13, ஜனவரி 2025 11:32:48 AM (IST)
துபாய் கார் பந்தயத்தில் 3-வது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்த 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேசிங்' அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த அஜித் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், அவரது அணி பங்கேற்று வெற்றி பெற்றது.
இதையடுத்து திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் அஜித் குமாருக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ்தளத்தில் வெளியிட்ட பதிவில் "என் அன்பான அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதனை செய்துள்ளீர்கள், கடவுள் ஊங்களை ஆசீர்வதிப்பார்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.