» சினிமா » செய்திகள்

பிக்பாஸ் சீசன் 8 : பட்டம் வென்றார் முத்துக்குமரன்!

திங்கள் 20, ஜனவரி 2025 10:43:49 AM (IST)



பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யா பிடித்தார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இந்த சீசனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதுநாள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதி நாளில் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகிய 3 போட்டியாளர்கள் இருந்தனர். 3ஆவது இடத்தை விஷால் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யா நஞ்சுண்டான் பிடித்தார் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கோப்பையுடன் ரூ.40.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory