» சினிமா » செய்திகள்
கர்நாடக அரசின் விருதை நிராகரித்த கிச்சா சுதீப்!
வெள்ளி 24, ஜனவரி 2025 12:07:26 PM (IST)
கர்நாடக மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒரவர் கிச்சா சுதீப். பெரும்பாலும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கிச்சா சுதீப் தனது நேர்த்தியான நடிப்பு திறமையால் புகழ் பெற்றுள்ளார். இவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன.இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு மற்றும் தேர்வு குழுவுக்கும் நடிகர் கிச்சா சுதீப் கடிதம் எழுதியுள்ளார்.
சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். இந்த கௌரவத்திற்காக மரியாதைக்குரிய நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும், பல ஆண்டுகளாக விருதுகளை பெறுவதை நான் நிறுத்தியதோடு இன்றும் அதே முடிவில் உறுதியாக இருக்கிறேன்.
இந்த முடிவு பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. தங்கள் படைப்பில் முழு முயற்சியுடன் பணியாற்றும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் அதைப் பெறுவதைப் பார்ப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.
மக்களை மகிழ்விப்பதற்கான எனது அர்ப்பணிப்பு எப்போதும் விருதுகளை எதிர்பார்க்காமல் இருந்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இந்த அங்கீகாரம் மட்டுமே சிறந்து விளங்க என்னை தொடர்ந்து பாடுபட வைக்கும் ஊக்கமாக அமைகிறது.
இந்த அங்கீகாரம் மட்டுமே என் வெகுமதி என்பதால், என்னை தேர்ந்தெடுத்த நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முடிவு ஏற்படுத்தக்கூடிய ஏமாற்றத்திற்கு நடுவர் மன்ற உறுப்பினர்களிடமும் மாநில அரசிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எனது முடிவை மதித்து, நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை, எனது பணியை அங்கீகரித்து இந்த விருதுக்கு என்னை பரிசீலினை செய்ததற்காக நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜமௌலியின் வாரணாசி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:21:22 PM (IST)

தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:24:05 PM (IST)

திருவண்ணாமலை மலை மீது தடையை மீறி சென்ற நடிகை: வனத்துறை விசாரணை!
வியாழன் 29, ஜனவரி 2026 11:16:22 AM (IST)

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு: பத்ம பூஷன் விருதுபெற்ற மம்மூட்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
திங்கள் 26, ஜனவரி 2026 10:09:32 AM (IST)

ஏகே 64 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
சனி 24, ஜனவரி 2026 4:12:47 PM (IST)

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!
சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)

