» சினிமா » செய்திகள்
ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி குறித்து ரஜினி தகவல்!
புதன் 24, செப்டம்பர் 2025 5:11:17 PM (IST)
ஜெயிலர் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் - 2 திரைப்படம் 2026, ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
வியாழன் 27, நவம்பர் 2025 12:18:37 PM (IST)

அதிகம் ட்ரோல் ஆன திரைப்படம் அஞ்சான்தான் : இயக்குநர் லிங்குசாமி
வியாழன் 27, நவம்பர் 2025 11:12:52 AM (IST)

அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:45:20 AM (IST)

கோலாலம்பூரில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா!
சனி 22, நவம்பர் 2025 10:45:31 AM (IST)

நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மறைவு : ரஜினிகாந்த் அஞ்சலி
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:47:24 PM (IST)

