» சினிமா » செய்திகள்
குக் வித் கோமாளி சீசன் 6: ராஜூ ஜெயமோகன் பட்டம் வென்றார்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 5:20:05 PM (IST)

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் ராஜூ ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரூ. 5 லட்சத்துக்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி -6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. வார இறுதி நாள்களில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் சமையல் போட்டியில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில், இறுதிவரை நீடித்து இருப்பவர் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமின்றி மக்கள் மனங்களைக் கவரும் வகையிலான சிரிப்பு நிகழ்ச்சியாகவும் குக் வித் கோமாளி இருப்பதால், தொடர்ந்து 6வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு சமையல் போட்டியாளரும் தங்களுக்கான கோமாளியை தேர்வு செய்துகொண்டு, நிகழ்ச்சியின் விதிகளைப் பின்பற்றி, இடையிடையே கொடுக்கப்படும் இடையூறுகளைத் தாண்டி, சமையல் செய்து முடித்திருக்க வேண்டும்.
இதனை மிகவும் நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்களுடன் செய்து முடிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகம் என்றே கூறலாம். அந்தவகையில் குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் ராஜூ ஜெயமோகன், ஷபானா, உமர் லத்தீப், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும், மிகுந்த உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில், தனது சமையல் திறனால் ராஜூ ஜெயமோகன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை ஷபானா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)

ரஜினி- ஸ்ரீதேவி காம்போ : ட்யூட் படம் குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 11:01:43 AM (IST)

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் அருள்நிதியின் ராம்போ..!
சனி 4, அக்டோபர் 2025 12:33:18 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா: மூக்குத்தி அம்மன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:15:39 PM (IST)

எஸ்டிஆர் - வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம்: கலைப்புலி தாணு கொடுத்த அப்டேட்!
புதன் 1, அக்டோபர் 2025 5:21:18 PM (IST)

தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேச்சு: ரிஷப் ஷெட்டிக்கு ரசிகர்கள் கண்டனம்!
புதன் 1, அக்டோபர் 2025 10:31:17 AM (IST)
