» சினிமா » செய்திகள்
தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேச்சு: ரிஷப் ஷெட்டிக்கு ரசிகர்கள் கண்டனம்!
புதன் 1, அக்டோபர் 2025 10:31:17 AM (IST)

காந்தாரா சேப்டர் 1 தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் இப்படத்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து 17 கோடி பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் சாதனை புரியும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த காந்தாரா - 1 புரமோஷனில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசினார். இதனைக் கேட்ட ரசிகர்கள், தெலுங்கு பேசாமல் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது கண்டிக்கத்தக்கது என விமர்சித்து வருகின்றனர்.
உண்மையிலேயே, ரிஷப்புக்கு தெலுங்கு தெரியாதா இல்லை கன்னடத்தில் பேசும் முடிவோடு வந்தாரா எனத் தெரியவில்லை. அதேநேரம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலேயே நேர்காணல்களை அளித்து வரும் ரிஷப் ஷெட்டிக்கு தெலுங்கு மட்டும் தெரியாதா என்றும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)

ரஜினி- ஸ்ரீதேவி காம்போ : ட்யூட் படம் குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 11:01:43 AM (IST)

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் அருள்நிதியின் ராம்போ..!
சனி 4, அக்டோபர் 2025 12:33:18 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா: மூக்குத்தி அம்மன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:15:39 PM (IST)

எஸ்டிஆர் - வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம்: கலைப்புலி தாணு கொடுத்த அப்டேட்!
புதன் 1, அக்டோபர் 2025 5:21:18 PM (IST)

குக் வித் கோமாளி சீசன் 6: ராஜூ ஜெயமோகன் பட்டம் வென்றார்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 5:20:05 PM (IST)
