» சினிமா » செய்திகள்
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா: மூக்குத்தி அம்மன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:15:39 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது....
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ்டரில் அம்மனாக நடித்து இருக்கும் நயன்தாரா சோகத்தில் அமர்ந்து இருப்பது போன்று உள்ளது. ரசிகர்கள் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனிடையே, சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

வெறுப்புப் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ்
வியாழன் 8, ஜனவரி 2026 4:11:15 PM (IST)

துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் முடிந்தது : கவுதம் மேனன் தகவல்
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:42:26 PM (IST)

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து வதந்தி : மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
திங்கள் 5, ஜனவரி 2026 4:42:39 PM (IST)

