» சினிமா » செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)

வெற்றி மாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு அரசன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் - எஸ்டிஆர் கூட்டணியில் வடசென்னை உலகில் கேங்ஸ்டர் திரைப்படமாக எஸ்டிஆர் - 49 படத்தின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு ‘அரசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் வடசென்னை யுனிவர்ஸில் சிம்பு 80-ஸ் கெட்டப்பில் கையில் அரிவாளுடன் நின்றுகொண்டிருக்கிறார்.
பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வடசென்னை 2 பாகத்துக்கு முன்னதாக, வடசென்னை யுனிவர்ஸின் சிம்புவின் படம் வெளியாகவுள்ளதாலும், வடசென்னை படத்தில் கதை நாயகனான ராஜனை (அமீர்) கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளை சிம்பு வைத்துள்ளார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வட சென்னை யுனிவர்ஸில் வெற்றி - சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
வியாழன் 27, நவம்பர் 2025 12:18:37 PM (IST)

அதிகம் ட்ரோல் ஆன திரைப்படம் அஞ்சான்தான் : இயக்குநர் லிங்குசாமி
வியாழன் 27, நவம்பர் 2025 11:12:52 AM (IST)

அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:45:20 AM (IST)

கோலாலம்பூரில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா!
சனி 22, நவம்பர் 2025 10:45:31 AM (IST)

நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மறைவு : ரஜினிகாந்த் அஞ்சலி
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:47:24 PM (IST)

