» சினிமா » செய்திகள்
தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

குக் வித் கோமாளி பிரபலமான நடிகை ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடிகை ஷாலின் ஜோயா, தமிழில் ‘கண்ணகி' படத்தில் நடித்திருந்தார். ‘குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். மலையாளத்தில் அவர் இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்' திரைப்படம் ஏற்கெனவே கவனத்தை ஈர்த்த நிலையில், இப்போது தமிழில் இயக்குநர் ஆக அறிமுகமாகிறார்.
இதை, ‘கலியுகம்' திரைப்படத்தைத் தயாரித்த ஆர்.கே.இன்டர்நேஷனல் சார்பில் ராமகிருஷ்ணா தயாரிக்கிறார். இதில், ‘நக்கலைட்ஸ்' அருண் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். மேலும் எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுவரை பார்த்திராத வேடத்தில் தேவதர்ஷினியும், கவுரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனுவும் நடிக்கின்றனர்.
இப்படம் பற்றி இயக்குநர் ஷாலின் ஜோயா கூறும்போது, "இது, 90-களின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் நடைபெறும் கதை. ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவம்அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி கலந்து சொல்கிறோம். திறமையான கலைஞர்களுடன் இந்தப்படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி" என்றார். இப்படத்துக்கு கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

