» சினிமா » செய்திகள்

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!

புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான தேர்வு அழைப்புகள் மூலம் பணம் பறிக்க முயல்வதாக புகார் எழுந்துள்ளது.

"மெட்ராஸ்”, "கபாலி”, "காலா” போன்ற வெற்றி படங்களின் இயக்குநர் பா. ரஞ்சித் "நீலம்” எனும் பெயரில் பல்வேறு அமைப்புகளையும் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். இந்த நிலையில், நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் சிலர் போலியான தேர்வு அழைப்புகள் (காஸ்டிங் கால்) விடுத்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும்; இதனால், கலைஞர்கள் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, நீலம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் "நீலம் என்ற பெயரில் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத குழுக்கள் போலி காஸ்டிங் கால் மற்றும் ஆடிஷன் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

எங்களது நிறுவனம் எந்தவொரு ஆடிஷன் அல்லது காஸ்டிங் வாய்ப்பிற்காகவும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது எந்தவொரு வகையான கட்டணத்தையும் கோருவதில்லை என்பதை தெளிவாகத் தெரிவிக்கிறோம். அதிகாரப்பூர்வமான அனைத்து காஸ்டிங் அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகள் எங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களின் வழியே மட்டுமே வெளியிடப்படும்.

அனைவரும் எச்சரிக்கையாக இருந்து எந்த தகவலையும் நம்பும் முன் சரிபார்த்து, எங்கள் பெயரில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான செயல்களை உடனடியாக புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory