» சினிமா » செய்திகள்

காந்தா படத்துக்கு எதிராக வழக்கு: ராணா பதிலடி

வியாழன் 13, நவம்பர் 2025 3:52:57 PM (IST)



காந்தா படம் குறித்து வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது. இப்படத்தில் நவம்பர் 14-ம் தேதி திரையரங்கில் படத்தைப் பாருங்கள் என்று ராணா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 14-ம் தேதி துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு தடைக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனுவுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ராணா. ‘காந்தா’ படத்தில் நடித்தது மட்டுமன்றி துல்கர் சல்மான் உடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ராணா. அப்போது, காந்தா படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்களே. அது குறித்து உங்கள் கருத்து” என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ராணா, "அது அடிப்படை ஆதாரமற்றது. இப்படத்தில் உண்மையான விஷயங்கள் எதுவுமே கிடையாது. நவம்பர் 14-ம் தேதி திரையரங்கில் படத்தைப் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அப்படம் எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory