» சினிமா » செய்திகள்
நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 56வது சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,கோவாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
50 ஆண்டுகளாக தனது திரை ஆளுமையால் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, உலகம் முழுக்க மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை என்றும் ஈர்க்கும் வல்லமை கொண்ட ரஜினிகாந்த் எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு: பத்ம பூஷன் விருதுபெற்ற மம்மூட்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
திங்கள் 26, ஜனவரி 2026 10:09:32 AM (IST)

ஏகே 64 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
சனி 24, ஜனவரி 2026 4:12:47 PM (IST)

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!
சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன்!
வியாழன் 22, ஜனவரி 2026 10:15:27 AM (IST)

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

