» சினிமா » செய்திகள்
கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட மறுநாளே அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் தியேட்டர் உரிமையாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் ட்ராப்? சேயோன் முடிவால் திடீர் திருப்பம்!
சனி 28, மார்ச் 2026 10:51:11 AM (IST)

விஜய் - த்ரிஷா விவகாரம்: மனதில் பட்டதை பேசியதாக சமுத்திரக்கனி விளக்கம்!
புதன் 25, மார்ச் 2026 5:39:37 PM (IST)

நீங்கள் தான் எங்களின் அளவுகோல்: ரஜினியின் பாராட்டுக்கு துரந்தர் 2 இயக்குநர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 24, மார்ச் 2026 11:20:34 AM (IST)

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

அடுத்து அரசியல் களம்? சினிமாவிலிருந்து விலகுகிறாரா த்ரிஷா?
வெள்ளி 20, மார்ச் 2026 10:35:50 AM (IST)

மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான்: 34 ஆண்டுகால இசைப் பயணம் முடிவுக்கு வருகிறதா?
புதன் 18, மார்ச் 2026 11:20:49 AM (IST)

