» சினிமா » செய்திகள்
ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 6, ஜூலை 2026 12:28:49 PM (IST)

ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜாவின் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் நடிப்பில், அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவான படம் ஹாப்பி ராஜ். இளஞ்செழியன், பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
நடிகர் அப்பாஸ் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் திரையரங்கு வெளியீட்டை தொடர்ந்து ஓடிடியிலும் வெளியானது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்று இருந்த பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது அனுமதியின்றி, உருமாற்றி தனது பாடலை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.எனவே அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம் குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், வக்கீல் ஏ சரவணன் ஆஜராகி இளையராஜா அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாடலை உருமாற்றி உள்ளதால் பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஹேப்பி ராஜ் படத்தில் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் 6 இயக்குநர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:09:16 PM (IST)

அரசன் படம் வசூலில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும்: தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை!
சனி 4, ஜூலை 2026 5:36:02 PM (IST)

பராசக்தி பட சம்பள பாக்கி விவகாரம்: டான் பிக்சர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 2, ஜூலை 2026 11:45:39 AM (IST)

பாலிவுட் சூப்பர்ஹிட் படங்களின் உண்மையான அஸ்திவாரம் பாக்யராஜ்: அனில் கபூர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:12:00 PM (IST)

ஐந்து ரூபாய் மருத்துவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:05:34 PM (IST)

ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது: கமல்ஹாசன் இரங்கல்!
சனி 27, ஜூன் 2026 5:50:53 PM (IST)

