» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (திருநெல்வேலி)
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு: மார்ச் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 2, மார்ச் 2024 12:50:26 PM (IST)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் கடந்த 26-ந் தேதி வெளியிட்டுள்ளது. பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 18-ந் தேதி ஆகும். மறுநாள் (19-ந் தேதி) இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி. தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். தமிழ்நாட்டில் 8 மையங்களில் தேர்வு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
பதிவாகவில்லை