» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட மம்தா முடிவு: காங்கிரஸ் அப்செட்!

புதன் 24, ஜனவரி 2024 5:13:32 PM (IST)

மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்  தெரிவித்துள்ளார்.
 
"காங்கிரஸ் கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் இணைவோம்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவை தோற்கடிக்க எதையும் செய்வோம் என்று கூறியவர் மம்தா பானர்ஜி. மம்தாவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணிக்கு வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவாக தெரிவித்து இருந்தார்.

மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இந்திய கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவரையும் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் சேரும்படி  காங்கிரஸ் தலைவர் பலமுறை தெரிவித்து இருந்தார்".

இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

TWO LEAFJan 25, 2024 - 06:17:37 PM | Posted IP 172.7*****

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் 10 கோஷ்டிகள் உள்ளது , இவர்களை நம்பி இந்தியா முழுவதும் ஒன்று சேர்க்க முடியாது. காங்கிரஸ்காரர்கள் பதவி என்றால் வருவார்கள். வேலை செய்ய வரமாட்டார்கள். I .N .D .I .A கூட்டணி வேலைக்கு ஆகாது . இவர்கள் ஜெயித்தால் நாடு சோமாலியவை விட மோசமாக ஆகிவிடும்.

கந்தசாமிJan 25, 2024 - 02:02:15 PM | Posted IP 172.7*****

கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு எழுபத்தைந்து சதவீதமும் மற்ற கட்சிகளுக்கு இருபத்தைந்து சதவீதமும் பிரித்தால் பிரச்சினை வராது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory