» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

விக்ரவாண்டி இடைத் தேர்தல் புறக்கணிப்பு: அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

சனி 15, ஜூன் 2024 4:59:16 PM (IST)

விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த நா.புகழேந்தி. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு ஜூன் 10ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாக திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளரக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என நேற்று (ஜூன்.14) தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாமக வேட்பாளராக சி.அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory