» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்: கார்த்தி சிதம்பரம் விருப்பம்

சனி 20, ஜூலை 2024 3:53:37 PM (IST)

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும். கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது  என்று கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெற வேண்டும். கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. கூட்டணி என்பதால் நாம் எதையும் தட்டிக் கேட்காமல் நிற்கக் கூடாது. காவல்துறை ரவுடிகளை என்கவுன்டர் செய்து வழக்கை சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுன்டர் செய்கிறார்கள்.

இதையெல்லாம் பேசும்போது மின் கட்டணத்தை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.

அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். நாம் கூட்டணியை மதிக்கிறோம். திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுகவின் திட்டங்களை மதிக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் நாம் பொதுப்பிரச்சினைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம். இனி தயக்கம் காட்ட கூடாது" என்றார்.


மக்கள் கருத்து

KAMARAJAR FANSJul 20, 2024 - 04:45:47 PM | Posted IP 162.1*****

அருமையான முடிவு. தன்மானம் வந்துள்ளது, அப்படியே கள்ளகுறிச்சி பற்றி பேசுங்கள, காங்கிரஸ் வலுப்பெறும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory