» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு
திங்கள் 13, ஜனவரி 2025 8:35:22 AM (IST)
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் "கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்துக்கு நேர் எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக்கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, பேரிடர் மாடல் என்று உரக்கச் சொல்ல தொடங்கி விட்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியை பொறுத்தவரை, நடைபெறவிருப்பது இடைத்தேர்தலுக்கான, இடைத்தேர்தல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, பொதுமக்களை பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதை பார்த்தோம். தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளை போல பொதுமக்களை அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும், நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்து உள்ளோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : தேர்தல் ஆணையம் மறுப்பு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:49:23 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)





மக்கள் நலன்Jan 13, 2025 - 12:54:12 PM | Posted IP 162.1*****