» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மகளிருக்கு உதவித் தொகை: திமுகவை பாஜக பின்பற்றுகிறது - கனிமொழி எம்பி கருத்து!!
சனி 18, ஜனவரி 2025 10:32:37 AM (IST)
பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள நிலையில், திமுகவை பாஜக பின்பற்ற துவங்கி விட்டதாக கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, அண்ணா நகர், கோபுரப் பூங்காவில் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" நடைபெற்று வருகிறது. பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இத்திருவிழாவில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் நடத்திய இசை, நடன நிகழ்ச்சிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்ப்பபட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "தி.மு.க.வை பா.ஜ.க. பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் பல்வேறு முக்கிய திட்டங்களை இன்று மற்ற மாநிலங்களும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது பா.ஜ.க.வும் பின்பற்ற தொடங்கி இருக்கிறது வாழ்த்துகள்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
வாழ்த்துகள்Jan 18, 2025 - 10:41:05 AM | Posted IP 162.1*****
பிஜேபி சொன்னதை செய்வார்கள். நீங்கள் எல்லா குடும்ப தலைவிகளுக்கும் கொடுக்க வில்லை சராசரியா 25 % குடும்பத்தலைவிகளுக்குத்தான் கிடைத்தன. நன்றாக உருட்டுகிறீர்கள். STICKER க்கு பெயர் போனவர்கள் விடியல், இப்படி உருட்டலாமா??????
மேலும் தொடரும் செய்திகள்

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:16:06 PM (IST)

ஆதாரை ஏற்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:39:42 PM (IST)

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:09:14 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)

ஏம்பாJan 18, 2025 - 12:58:31 PM | Posted IP 162.1*****