» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்குவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, இன்று சந்தோஷம் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 177-வது வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை. இது போன்ற வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. எனவே விரைவில் கூட்டணியை முடிவு செய்து ஆபரேஷன் சிந்தூர் போல 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்குவோம் என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தேர்தல் ஆணையக் குழு ஆய்வு நிறைவு!
சனி 28, பிப்ரவரி 2026 5:16:35 PM (IST)

லட்சக்கணக்கான கோடி கடன் எங்கே போனது? தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:43:06 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:25:19 PM (IST)

விஜய் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது : நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:16:38 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)


வெற்றிவேல் வீரவேல்மே 17, 2025 - 09:12:10 AM | Posted IP 172.7*****