» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)
தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால், ஊழலைக் கட்டுப்படுத்தினால் முதல் ஆளாக நாம் அதனை வரவேற்போம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் நடைபெற்ற வீ தி லீடர்ஸ் அமைப்பின் அறிமுகக் கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: "திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதியையும், என்னையும் பார்த்து, 'இதுவரை எட்டுப் பேர் மீது அவதூறு வழக்கு போட்டு, 6 பேரிடம் மன்னிப்பு கடிதமும், ஒரு பத்திரிகையிடம் ரூ.25 லட்சம் நஷ்ட ஈடும் வாங்கியுள்ளேன்; எந்த வழக்கிலும் தோற்றதில்லை' எனக் குறிப்பிட்டார். மேலும் தனக்கு 82 வயது ஆவதாகவும், 50 வருட அரசியல் வாழ்க்கையில் 40 வருடங்களாகப் பொருளாளராக இருப்பதாகவும் பேசினார்.இதனைத் தொடர்ந்து வழக்கு படிப்படியாகக் குறுக்கு விசாரணை வரை சென்ற நிலையில், அவராகவே நீதிமன்றத்திற்கு வந்து வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். வழக்கைப்பதிவு செய்தவர் அதனை எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம், அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் வாபஸ் வாங்கியதால் நான் சமரசம் செய்து கொண்டதாகக் கூறுவது தவறானது. நீதிமன்றத்தில் அவர் பேசியபோது என் மீது அவதூறு பரப்பியதாக நான் வாதிட்டேன். இந்த வழக்கில் எந்தச் சமரசமும் செய்யப்படவில்லை. நான் பேசியது உண்மை, அதைத் தொடர்ந்து சந்திப்பேன். தனிப்பட்ட முறையில் ஊழலை எப்போதும் எதிர்க்கிறேன்" என்றார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் ஊழல் கட்டுக்குள் வந்தால் ஒரு குடிமகனாக மகிழ்ச்சி. எந்தவொரு புதிய அரசு வந்தாலும் செயல்படுவதற்கு ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். தமிழகம் தற்போது கடனில் புரையோடிப் போயுள்ளது. புதிய தவெக அரசில் அமைச்சர்களாக உள்ளவர்களில் பாதிப் பேர் இதற்கு முன்பு கவுன்சிலராகக் கூட இருந்ததில்லை. நிர்வாக நடைமுறைகளை அவர்கள் கற்றுக் கொள்ளவே ஆறு மாத காலம் ஆகும். எனவே, அவர்களுக்குத் தடைகளைப் போடாமல் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால், ஊழலைக் கட்டுப்படுத்தினால் முதல் ஆளாக நாம் அதனை வரவேற்போம்" என்று குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)

தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
புதன் 24, ஜூன் 2026 11:44:30 AM (IST)

தவெக அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது: வைகோ புகழாரம்!
வியாழன் 18, ஜூன் 2026 3:32:37 PM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது! – அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு!
வெள்ளி 22, மே 2026 11:37:11 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)


