தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா பாடல் அனிமேஷன் வடிவில்!!
பதிவு செய்த நாள் | புதன் 24, அக்டோபர் 2012 |
---|---|
நேரம் | 4:42:09 PM (IST) |
தூத்துக்குடி மாவட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல் எங்கள் ஊரிது முத்துநகர் என்னும் பேரிது... இந்த பாடலை தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கியப்பன் இயற்றியுள்ளார். பாக்யராஜ் இசையமைத்துள்ளார். பிரபல பாடகி அணுராதா ஸ்ரீராம் இப்பாடலை பாடியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரின் உத்தரவின் பேரில் இந்த பாடல் உருவாக்கப்பட்டு, மாவட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டு பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்டத்தின் பெருமை, வீரம், விடுதலை போராட்ட வரலாறு, சுற்றுலா சிறப்புகள், ஆன்மீக ஸ்தலங்கள், மாவட்டத்தின் உற்பத்தியாகும் பிரத்யேக பொருட்களின் பெருமைகள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடலுக்கு தூத்துக்குடி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களிலும் இப்பாடல் ஒலிக்கத் தவறுவதில்லை. மாவட்ட மக்களின் விருப்ப பாடலாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த பாடல் அனிமேஷன் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.