ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு : தலைவி படத்தின் முதல் தோற்ற விடியோ
பதிவு செய்த நாள் | சனி 23, நவம்பர் 2019 |
---|---|
நேரம் | 3:58:38 PM (IST) |
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது. புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், தமிழில் தலைவி என்றும், ஹிந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூன் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் அதன் விடியோவும் வெளியாகியுள்ளது.