சந்தானம் நாயகனாக நடிக்கும் கிக் படத்தின் டிரெய்லர்!

பதிவு செய்த நாள் | வியாழன் 17, ஆகஸ்ட் 2023 |
---|---|
நேரம் | 5:23:08 PM (IST) |
ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் கிக். கன்னடத்தில் லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்தின் ஜோடியாக, தாராள பிரபு படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இருந்துவந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.