பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர்!

பதிவு செய்த நாள் | புதன் 1, நவம்பர் 2023 |
---|---|
நேரம் | 11:55:20 AM (IST) |
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.