திருநெல்வேலியின் வரலாறு (12 of 14)
திருநெல்வேலி மாவட்டத்து புகழ்பெற்ற பெருமக்கள்
அகத்தியர் மற்றொகத்து நப்பசலையார், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சொல்லதிகாரத்துக்கு உரை எழுதிய சேனாவரையர், நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற வைணவ பெருமக்கள். குமரகுருபரர், குற்றால குறவஞ்சியை இயற்றிய திரிகூட ராசப்பக் கவிராயர். திருநெல்வேலி வரலாறு எழுதிய கால்டுவெல். நெல்லை நகரில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்: கவிராஜ நெல்லையப்ப பிள்ளை, கவிராஜ ஈஸ்வர மூர்த்தியாபிள்ளை பலபட்டை அழகிய சொக்கநாதப் பிள்ளை, இரட்சண்ய யாத்திரிகம் எழுதிய கிருஷ்ணபிள்ளை, வடகன் குளம் சவரிராயலு பிள்ளை, காசு பிள்ளை, முன்னீர் பள்ளம் பூரணலிங்கம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, வையாபுரிபிள்ளை, வெள்ளக் கால் சுப்பிரமணிய முதலியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை, தேவநேயபாவாணர், ம.லெ.தங்கப்பா, புதுமைப்பித்தன், அ.மாதவையா, பி.ஸ்ரீ.; பாஸ்கர தொண்டைமான், மீ.பா. சோமசுந்தரம், சிதம்பர ரகுநாதன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
கலை வளர்த்தோர்
வாய்பாட்டு : ஜி.கிட்டப்பா, ரெங்கம்மா, வி.வி.சடகோபன், சுந்தர மூர்த்தி ஒதுவார், ஹரிகேச முத்தையாபாகவதர்.
நாதசுரம் : காருக்குறிச்சி அருணாசலம், ஐயாகுட்டிக் கம்பர், திருநெல்வேலி சின்ன சுப்பையா கம்பர்.
தொழிலதிபர்கள் : டி.வி.எஸ். அய்யங்கார், என்பில்டு சுந்தரம் ஐயர், ஸ்பென்ஸர் அனந்தராம கிருஷ்ணன் - அடிசன் & எடிசன் நிறுவனம். இந்தியா சிமெண்ட்ஸ் சங்கரலிங்கம் அய்யர்.
வரலாற்றாசிரியர் : கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. வெளியீட்டாளர் : வ. சுப்பையாபிள்ளை. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.