திருநெல்வேலியின் வரலாறு (7 of 14)

தொழில் வளர்ச்சி
 
நீராவியைக் கொண்டு இயக்கப்படும் ஆலைகள் இம்மாவட்டத்தில் தான் முதன் முதலாக நிறுவப்பட்டன. அது 'திருநெல்வேலி மில்' என அழைக்கப்பட்டது.
 
தொழில்வளர்ச்சி இன்னும் பெருகவில்லை. பாரம்பரியத் தொழில்களே பெருமளவு நடந்து வருகின்றன. சுதந்திரத்திற்கு பிறகு பாபனாசம் மின்னாக்க நிலையம் மூலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள் மின்வசதி பெற்றுள்ளன.
 
நூல் ஆலைகள்
 
இம் மாவட்டத்திலுள்ள நூல் ஆலைகள் : மதுரைமில், விக்கிரமசிங்கபுரம் கீதாஞ்சலி மில், சங்கரன் கோவில் ஸ்ரீ கணபதி மில், தச்சநல்லூர் கார்த்திகேயாமில், விரவநல்லூர் பலராமவர்மாமில், செங்கோட்டை நெல்லை காட்டன் மில், தாழையூத்து சவுத் இந்தியா கோவாபரேடிங் ஸ்பின்னங் மில் பேட்டை சங்கர் மில், தச்ச நல்லூர், சுந்தரம் டெக்ஸ் டைல்ஸ்-நாங்குனேரி; ராமலிங்கா மில்-மேலச்செவ்வல்.
 
இந்தியா சிமெண்டுத் தொழிற்சாலை
 
 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்தது. இத்தொழிற்சாலை யிலுள்ள மூன்றாவது ஆலை இந்தியாவிலேயே பெரிய ஆலைகளுள் ஒன்று. தாழையூத்தின் சுற்று வட்டாரத்தில் 8 கி.மீ அளவில் சுண்ணாம்புக்கல் கிடைப்பதாலும், தூத்துக்குடி துறைமுகம் இப்பகுதியில் இருப்பதாலும் இத்தொழில் வளர்ச்சியடைந் துள்ளது. இத்தொழிற்சாலையின் உற்பத்தி நாளொன்றுக்கு 700 டன்னாகும். வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் பிற இடங்களின் வளர்ச்சியைக் காண்போம்.
 
சங்கரன்கோவில்
 
சங்கர நயினார் கோவிலுக்கு வடக்கே ஒரு பஞ்சாலை இயங்குகிறது. இங்கு ஒரு வனஸ்பதி தொழிற்சாலையும் உள்ளது. சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் பல தீப்பெட்டி தொழிற்சாலைகளும், மூன்று மூட்டைபூச்சி ஒழிப்பு மருந்து செய்யும் நிறுவனங்களும், சோப்பு செய்யும் தொழிலகங்களும், பருத்தி அறைக்கும் ஆலைகளும் இங்கு இயங்குகின்றன. வாடிக்கோட்டை கிராமத்தில் ஒரு பஞ்சாலை உள்ளது.
 
இவ் வட்டம் மழை வளம் குறைந்தது. இங்கு சித்திரை பத்துக்கு மேல் ஆவணி, புரட்டாசி முடிய மேய்க்காற்று வீசும். சங்கர நாயனார் கோவிலில் சிவனும், பெருமாளும் 'சங்கர நாராயண' வடிவத்தில் வழிபடப்படுகின்றனர். இங்கு ஆடி மாதத்தில் உற்சவத்தின் போது 'மாட்டுத் தாவணி' நடைபெறும் சங்கர நாராயணார் கோவில் கி.பி.1022 இல் கட்டப்பபட்டது. இக்கோவில் கோபுரம் 125 அடி உயரமானது. புலித்தேவரால் அமைக்கப்பட்ட உட்கோவில் மர வேலைபாட்டைக் காணலாம்.
 
நாங்குனேரி
 
நெல்லை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ளது. நல்ல மழை பெறும் வட்டம். தென்கலை வைணவர்களுக்கு முக்கியமான 'வானமாமலை மடம்' இங்குள்ளது. திருநெல்வேலி யிலிருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் 28 கி.மீ தொலைவில் உள்ளது. நம்மாழ்வாரால் பாடல்பெற்றது. தங்கத்தால் இழைக்கப்பட்ட மண்டபம், தூண்கள், நகைகள் காணத் தக்கவை.
 
செங்கோட்டை
 
வட்டத் தலைநகர். மேற்கு தொடர்ச்சி மலைக் காணப்படுகிறது. தமிழ் நாட்டிலேயே சிறிய வட்டம் 194 ச.கி.மீ; இங்கு மழை அதிகம் பெறுகிறது. ஜூலை முதல் நவம்பர் வரை நிலவும் காலநிலை உடல் நலத்திற்கு ஏற்றது. இவ்வட்டத்தில் மோட்டை அணை, ஸ்ரீமூலபேரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முக்கியமானத் தொழில் வேளாண்மையே ஆகும். சொந்த தேவைக்கு ஆனைக் கொம்பன் நெல்லையும், விற்பனைக்குச் சிறுமணிநெல்லையும் பயிரிடுகின்றனர்.
 
முதல் போகத்தில் நெல்லுடன் சோளம், உளுந்தும் இரண்டாவது போகத்தில் மிளகாய், வெங்காயம் ஆகியவையும் பயிராகின்றன. மண்பாண்டம் செய்வதும், பிரம்புக் கூடைகள் தயாரிப்பதும் இங்கு சிறந்த முறையில் நடைபெறுகின்றன. கட்டளைமலைக் குடியிருப்பில் பாலராமவர்மா பஞ்சாலை இருக்கிறது.
 
செங்கோட்டை 'மண்வெட்டி' புகழ்பெற்றது. 'தோசைக்கல்' இங்கு செய்யப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் சந்தை கூடுகிறது. பேல் கட்டப் பயன்படும் மூங்கில் பட்டைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


Favorite tags



Tirunelveli Business Directory