திருநெல்வேலியின் வரலாறு (6 of 14)
திருநெல்வேலி மாவட்டத்தில் காணவேண்டிய முக்கியமான வழிபாட்டு தலங்கள்
திருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லைப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில்; சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணன்-கோமதி அம்மன் திருக்கோவில்; பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவில்; பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில்; நாங்குநேரி வானுமாமலை கோயில்; உவரியில் சுயம்புலிங்க சுவாமி கோவில்; தென்காசி-காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை சைவ-வைணவத் தலங்கள் ஆகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறித்துவ தலங்கள்: திருமலைப்புரம்; டோனாவூர்; திசையன் விளை; இடையன் குடி, உவரி, வடக்கன்குளம், பாளையங்கோட்டை
இஸ்லாமியர்களுக்கு கோயில்பத்து, பொட்டல் புத்தூர் தர்கா, கீழ்க்கடைய நல்லூர் பள்ளிவாசல், தென்காசி காட்டுபாவா பள்ளி வாசல், புளியங்குடி மசூதி, மேலச் செவல் நைனா முகம்மது பள்ளிவாசல் போன்றவை முக்கியமான வழி பாட்டிடங்களாகும்.