திருநெல்வேலியின் வரலாறு (2 of 14)
பொதுவிவரங்கள்
மழையளவு | 814.8 மி.மீ |
புகைவண்டி நிலையங்கள் | 26 |
காவல் நிலையங்கள் | 80 |
சாலைநீளம் | 5,432 கி.மீ |
பதிவுபெற்ற வாகங்கள் | 48,773 |
அஞ்சலகங்கள் | 553 |
தொலைபேசிகள் | 29,779 |
எல்லைகள்
கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும்; மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்; தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி நிறுவனங்கள்
மாநகராட்சி-1; திருநெல்வேலி. நகராட்சிகள் :6; ஊராட்சி ஒன்றியம் :19; பேரூராட்சிகள் 39; சட்டசபை தொகுதிகள் :11 1) திருநெல்வேலி 2) பாளையங்கோட்டை 3) சேரன் மாதேவி 4) அம்பா சமுத்திரம் 5) தென்காசி 6) ஆலங்குளம் 7) வாசுதேவநல்லூர் 8) சங்கரன் கோவில் 9) இராதாபுரம் 10) நாங்குநேரி 11) கடையநல்லூர்.
கல்வி
பள்ளிகள்
தொடக்கப்பள்ளிகள்-நடுநிலை-உயர்நிலை-மேல்நிலை-கல்லூரிகள் 1,460 411 90 129 14 இது தவிர தொழில் கல்வி நிறுவனங்கள்-3; அரசு மருத்துவக் கல்லூரி; அரசு சித்த மருத்துவக் கல்லூரி; தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7; தொழிற் நுட்பக் கல்லூரிகள் 5; ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8.
மருத்துவம்
மருத்துவ மனைகள்-10; மருந்தகம்-3; தொடக்க மருத்துவ நல நிலையம் 55; துணை தொ.ம.நலநிலையம்-385.
ஆற்றுவளம்
மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.
தாமிரபரணி : பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன் கலக் கிறது. தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.
சிற்றாறு
இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.
அணைகள் :
மணிமுத்தாறு அணை :
அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன.
பாபநாசம் அணைகள் : பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம். மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்க நீர் 10 கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு குழாய் களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஸ்ரீமுகப்பேரி அணை
தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.