» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: இந்திய அணிக்கு ராகுல் ஆறுதல்
திங்கள் 20, நவம்பர் 2023 11:34:14 AM (IST)
"இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதனால், இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவித்து கூறியுள்ளதாவது;
"இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அடுத்து வருவதை நாம் வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
REALNov 20, 2023 - 03:58:01 PM | Posted IP 172.7*****
இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது இவனுக்கு மிகுந்த சந்தோஷம்.
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: இந்தூர் வாலிபர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:49:58 PM (IST)

பிஹாரில் ஊடுருவல்காரர்களை எங்கள் அரசு வெளியேற்றும்: அமித் ஷா பிரச்சாரம்
சனி 25, அக்டோபர் 2025 5:38:13 PM (IST)

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)

பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)





இவன்Nov 25, 2023 - 11:19:29 AM | Posted IP 172.7*****