» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: பிரதமர் மோடி பங்கேற்பு!

வியாழன் 25, டிசம்பர் 2025 12:46:38 PM (IST)



டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் மக்களுடன் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கான பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் அங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்து கொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory