» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் : ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 20, நவம்பர் 2023 4:51:37 PM (IST)
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரரின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1 லட்சத்துக்கான பிணைப் பத்திரத்தை அவா் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனா்.அதேபோல், ஜாமீன் காலம் முடிந்து ராஜமகேந்திரவரம் சிறைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் நவம்பர் 28-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, "சந்திரபாபு நாயுடு நவம்பர் 28-ஆம் தேதி வரையில் இடைக்கால ஜாமீனில் இருக்கிறார். அவருக்கு தற்போது ஆந்திர உயர் நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.” என்று கூறினார். முன்னதாக, உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை அடுத்து, 53 நாட்கள் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்த சந்திரபாபு நாயுடு அக்டோபர் 31-ஆம் தேதி ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
