» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ம.பி., ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது: தெலுங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி!

ஞாயிறு 3, டிசம்பர் 2023 9:47:12 PM (IST)

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேளை, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. இதன் மூலம் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory