» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் : பிரதமர் மோடி உறுதி

திங்கள் 4, டிசம்பர் 2023 8:29:42 AM (IST)

பா.ஜனதாவுக்கு வெற்றியை பரிசளித்த மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தெலுங்கானாவை தவிர மீதமுள்ள 3 மாநிலங்களையும் பா.ஜனதா கைப்பற்றி உள்ளது.

இந்த மகத்தான வெற்றியை நாடு முழுவதும் பா.ஜனதாவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த பிரமாண்ட வெற்றிக்காக கட்சியினரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கிடைத்துள்ள வெற்றியானது, பா.ஜனதாவின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மக்கள் உறுதியாக இருப்பதை காட்டுகிறது. 

பா.ஜனதா என்றால் நல்லாட்சியும், வளர்ச்சியும்தான். இந்த மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு வெற்றியை பரிசளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் அயராது உழைப்போம் என்பதை உறுதியளிக்கிறோம். கட்சியின் தொண்டர்களுக்கு சிறப்பு நன்றிகள். அவர்கள் ஒவ்வொருவரும் சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்கள் அயராது உழைத்து நமது வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை மக்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளனர்.

தெலுங்கானாவில் உள்ள அன்புமிக்க சகோதர, சகோதரிகளே... பா.ஜனதாவுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும். தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது. மாநில மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். அங்கும் சிறப்பாக உழைத்த பா.ஜனதா தொண்டர்களுக்கு நன்றி கூறுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory